பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்தை தடுக்க ஒவ்வொரு வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போட முடியாமா என்று பேசி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார் மகாராஷ்டி மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல்.
மகாராஷ்டிர மாநில சட்ட மேல வையில் பெண்கள் மற்றும் தலித்து களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புதன்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய ஆர்.ஆர். பாட்டீல், “பாலி யல் பலாத்கார சம்பவத்தில் 40 சதவீதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாகவே நடக்கிறது. சம்பந்தப்பட்ட பெண் களின் தந்தை, சகோதரர்களின் மூலம் இதுபோன்ற குற்றங்களில் 6.55 சதவீதம் நிகழ்கிறது. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
சமூக நீதிநெறிகள் பிறழ்வதன் மூலம் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிக்கின்றன. இந்த குற்றங் களைத் தடுக்கு வீடுகள் தோறும் போலீஸ் பாதுகாப்பு போட முடியாமா? என்று ஆர்.ஆர். பாட்டீல் பேசினார்.
இதற்கு எதிர்கட்சியான பாஜக கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. சட்ட மேலவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் வினோத் தாவ்டே, குற்றங் களைத் தடுக்கும் பொறுப்பில் உள்ள உள்துறை அமைச்சர் தனது பணியில் தோல்வியடைந்து விட்டார் என்பதைத்தான் அவரது பேச்சு உணர்த்துகிறது. பெண் களைப் பாதுகாக்க வீடுதோறும் போலீஸ் பாதுகாப்பு போட வேண் டிய அவசியம் இல்லை. உள்துறை அமைச்சர் திறமையாக செயல் பட்டால் ஒரு போலீஸ்காரரை வைத்து ஆயிரம் பேருக்கு பாது காப்பு கொடுக்க முடியும் என்றார்.
பாஜக எம்.பி. பூணம் மகாஜனும் அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக