வெள்ளி, ஜூன் 28, 2013

முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து திட்டங்களை தயாரிக்கும் காங்கிரஸ், பா.ஜ.க!

புதுடெல்லி: தேர்தல் காலங்களில் கைநிறைய வாக்குறுதிகளுடன் முஸ்லிம் வாக்காளர்களை அணுகும் காங்கிரஸ் கட்சி வழக்கம்போல தனது தந்திரங்களை பிரயோகிக்கும் வேளையில், தங்களிடமிருந்து விலகியிருக்கும் நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை மக்களான முஸ்லிம்களை ஈர்ப்பதற்காக பா.ஜ.கவும் திட்டங்களை வகுத்து வருகிறது.


இந்திய வரலாறு காணாத குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை மறக்கவேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பாக பா.ஜ.கவின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங்பேசியிருந்தார். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க ஏற்பாடுச் செய்த சிறுபான்மை மாநாட்டில் பர்தாவும், தொப்பியும் அணிந்த சில முஸ்லிம்களைஅழைத்துவந்த மாறுபட்ட தந்திரத்தை மேற்கொண்டது. உணவு, வாகனம், சம்பளம் கொடுத்து இவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களின் வாக்குகளை கவர புதிய திட்டங்களை வகுக்குமாறு அண்மையில் மக்களவை தேர்தலுக்கான பா.ஜ.கவின் பிரச்சார கமிட்டிக்கு தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்ட குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி, முக்தார் அப்பாஸ் நக்வியிடம் ஒப்படைத்துள்ளார். முஸ்லிம்கள் சந்திக்கும்பிரச்சனைகளை நான்காக பிரித்துள்ளது நக்வியின் தலைமையிலான குழு. சமூக-பொருளாதார துறைகளில் ஒடுக்கப்பட்ட நிலை, கல்வி துறையில் பிற்பட்ட நிலை, பாதுகாப்பின்மை, அரசியல் சக்திப்படுத்துதலில் பலகீனம் ஆகியனவாகும்.

இந்த நான்கு துறைகளிலும் முஸ்லிம்களை பாதுகாக்க திட்டம் வகுப்போம் என்பது பா.ஜ.கவின் வாக்குறுதி. எங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்தாலும், முஸ்லிம்களைகுற்றவாளிகளாக்கும் போக்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறுத்தவேண்டும் என்று நேற்று முன் தினம் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியது முஸ்லிம் தலைவர்களை கூட அதிர்ச்சிடையச் செய்தது. இந்தியாவில் முஸ்லிம்கள் பீதியில் வாழ்வதாகவும் நக்வி கூறினார். ஆனால், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை மறக்கவேண்டும் என்றும், அதற்கு முன்பாகவும் கலவரங்கள் நடந்துள்ளதாக கூறவும் நக்வி தயங்கவில்லை.

முஸ்லிம்களின் பாதுகாப்பை இழக்கச் செய்வது சங்க்பரிவார அரசோ, அதிகாரிகளோ அல்ல. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்தான் இவ்வாறு நடப்பதாக நக்வி கூறுகிறார்.அதேவேளையில், பழைய தந்திரங்களையே காங்கிரஸும் மேற்கொள்கிறது. சச்சார் கமிட்டி சிபாரிசுகளில் சிலவற்றை தூசி தட்டி எடுத்து நடைமுறைப்படுத்தமுயற்சி நடக்கிறது. மேலும் இஸ்லாமிய வங்கியியலை அமல்படுத்துவதில் நிதியமைச்சகத்திற்கு விரிவான வரைவு நகலை சிறுபானமை நலத்துறை அமைச்சகம்சமர்ப்பித்துள்ளது.

ஐ.ஐ.டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம் மாணவர்களுக்கு சேருவதற்கு உகந்த பயிற்சி மையங்களை நாடு முழுவதும் துவக்குதல், முஸ்லிம் மாணவிகளின் தலைமைத்துவ பண்பை அதிகரிக்கச் செய்யும் பயிற்சி மையங்கள் துவங்குதல், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் வளர்ச்சித்திட்டங்களை கொண்டு சேர்க்கும் திட்டங்களை கூடுதல் மாவட்டங்களில் பரவலாக்குதல் இவ்வாறு செல்கிறது காங்கிரஸின் முஸ்லிம் வாக்காளர்களை கவருவதற்கான திட்டங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக