வெள்ளி, ஜூன் 07, 2013

அன்புமணி ராமதாசு கும்பகோணத்திற்குள் நுழைய தடை !

கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி மகாபலிபுரத்தில் வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் பகுதியிலிருந்து ஏராளமான வன்னியர்கள் மகாபலிபுரத்திற்கு சென்றனர். அப்போது மரக்காணம் என்ற இடத்தில் ஏற்பட்ட கலவரத்தில் கும்பகோணத்தை அடுத்த தேவனாஞ்சேரியைச் சேர்ந்த விவேக் (வயது17) என்பவர் இறந்தார். இதையடுத்து பா.ம.க.வின் கட்சி நிர்வாகிகள் தேவனாஞ்சேரிக்கு சென்று விவேக்கின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிவாரண நிதியை வழங்கினர்.

இந்நிலையில் தேவனாஞ்சேரி விவேக் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க கும்பகோணத்தில் உள்ள பா.ம.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த நிவாரண உதவியை அளித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணிதலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கும்பகோணத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) வருவதற்கு கும்பகோணம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிலம்பரசனிடம் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் ராஜசேகர் அனுமதி கேட்டிருந்தார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் கும்பகோணம் வந்தால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படலாம் என்பதால் அவர் கும்பகோணத்திற்கு வருவதற்கு போலீசார் தடை விதித்து விட்டனர். இதுகுறித்து போலீசாரிடம் இருந்து ராஜசேகருக்கு பதில் தகவல் அனுப்பப்பட்டது. இதையடுத்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் வருகை ரத்து செய்யப்பட்டது.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக