சனி, ஜூன் 08, 2013

சிரியாவுக்கு மிகப் பெரிய உதவி! - ஐக்கிய நாடுகள் சபை!

ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மனிதாபிமான அடிப்படையிலான மிகப் பெரிய நிதியுதவி சிரியாவுக்கு அளிக்கப்பட இருக்கிறது.

சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிதியுதவி உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் ஒரு கோடி பேருக்குக் கிடைக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. சிரியாவில் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரில் சுமார் 15 லட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் 90,000 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவுக்குள் மட்டும் சுமார் 70 லட்சம் பேர் நிதியுதவியை நம்பியிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. சிரியாவில் போர் தொடர்ந்த அடுத்த தலைமுறையே இருக்காது என்று யுனிசெஃப் எச்சரித்துள்ள நிலையில், போர் உடனடியாக நிறுத்தப்பட்டாலும், சகஜ நிலை திரும்புவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக