வெள்ளி, ஜூன் 28, 2013

உத்தர்கண்ட் வெள்ளச் சேதம் : முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி ரூ.78 இலட்சம் நிதியுதவி!

உத்தர்கண்ட் மாநிலத்தை உருக்குலைத்துப் போட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளது அறிந்ததே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மீட்பு உதவிகளை அரசுகள் மட்டுமின்றி பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும், நிறுவனங்களும் ஏராளமாக வழங்கி வருகின்றன.

இப்பெரும் இயற்கைச் சீற்றத்தில் பாதிக்கப்பட்டுள்ள இந்து யாத்ரீகர்களுக்கு ஹைதராபாத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் கட்சி சார்பில் ரூ78 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ6 லட்சம் வழங்கவும் அக்கட்சி முன்வந்துள்ளது. ஆந்திர ஆளுநர் நரசிம்மனிடம் இத்தொகைகள் கையளிக்கப்படும் என்று கட்சித் தலைவர் அஸதுத்தீன் ஒவைஸி செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், கட்சித் தொண்டர்கள் 25 பேர் கொண்ட குழுவினர் உத்தர்கண்ட் மாநிலம் சென்று பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பங்களுக்குத் அடிப்படைத் தேவைக்குரிய பொருட்கள், ரூ.20 லட்சம் மதிப்பிலான மருந்துகள் மற்றும் மீட்பு உதவிகளை மேற்கொள்வர் என்றும் தெரிவித்தார்.
அதே சமயம், ஆண்டுக்கு ரூ 500 கோடிக்கு மேல் நன்கொடை பெறும் பாஜக உத்தர்கண்ட் பேரிடர் துயர் துடைப்பிற்காக வழங்கிய நிவாரணத் தொகை வெறும் ரூ 52 லட்சம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக