சனி, ஜூன் 22, 2013

அமெரிக்காவின் உளவுக்கு உதவி செய்ததா SKYPE? நியூயார்க் டைம்ஸ் அதிர்ச்சித் தகவல்!

மக்களைக் கண்காணிப்பதற்கு அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு அமைப்புக்கு உதவி செய்யும் வகையில் ரகசிய வசதி ஒன்றை ஸ்கைப் (Skype) வைத்திருந்ததாக நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப் (Skype) நிறுவனத்தை வாங்குவதற்கு முன், இந்த ரகசிய வசதி செயல்பட்டு வந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக என்.எஸ்.ஏ. அமைப்பும், ஸ்கைப் நிறுவனமும் ரகசியத் திட்டம் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே சமூக வலைத் தளங்களைக் கண்காணிப்பதற்காக ப்ரிஸம் (Prism) என்ற ரகசியத் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தி வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், ஸ்கைப் (Skype) பற்றிய தகவல் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக