செவ்வாய், ஜூன் 11, 2013

எங்களுக்கு உதவுவதில் இந்தியா நன்பேண்டா! - இலங்கை அமைச்சர்!

இலங்கைக்கு ஏதாவது என்றால் முதலில் ஓடிவரும் நட்பு நாடாக இந்தியா உள்ளது என்று இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷே கூறினார். அமைச்சர் பஷில் அதிபர் மஹிந்த ராஜபக்ஷேவின் இளைய சகோதரர் என்பது குறிக்கத்தக்கது. இலங்கையில் உள்நாட்டுப் போரினால் வீடிழந்த தமிழர்களுக்கு சுமார் 50,000 வீடுகளைக் கட்டித் தர இந்தியா முன்வந்தது. அதன்படி கட்டப்பட்ட 4,000 வீடுகளுக்கான திறப்பு விழா பட்டீகோலாவில் நடைபெற்றபோது, சிறப்பு விருந்தினராக அமைச்சர் பசில் பேசுகையில்:


" இலங்கைக்கு இந்தியா மிகவும் நட்பு நாடாக உள்ளது. எங்களது வளர்ச்சியில் இந்தியா எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறத" என்றார்

அவர் மேலும் கூறுகையில், இலங்கையில் இந்தியத் தூதராக இருந்த அசோக் கந்தா இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிறப்பாக செய்துள்ளார்  என்று நன்றி தெரிவித்தார். "இலங்கைக்கு  உதவி செய்வதில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. போருக்குப் பிறகு நாங்கள் செய்த மறுவாழ்வு திட்டங்களை இந்தியா பாராட்டியுள்ளது" என்றும் அமைச்சர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக