வெள்ளி, ஜூன் 21, 2013

ஸ்மார்ட்போன்களை அன்லாக் செய்ய மின்னணு மோதிரம் அறிமுகம்!

ஸ்மார்ட்போன்களை அன்லாக் (Unlock) செய்வதற்குப் பயன்படும் மின்னணு மோதிரம் ஒன்றை சீனாவைச் சேர்ந்த ஷாண்டா (Shanda) என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோதிரத்தை அணிந்து கொள்வதன் மூலம், ஸ்மார்ட்போன்களை பாஸ்வேர்ட் மூலம் அன்லாக் (Unlock) செய்வதற்குப் பதிலாக, மோதிரத்தை அருகில் கொண்டு சென்று அழுத்துவதன் மூலம் அன்லாக் (Unlock) செய்ய முடியும். ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் மட்டும் இந்த மோதிரம் இப்போதைக்கு செயல்படும்.

எனினும் பிற ஸ்மார்ட்போன்களுக்கு விரைவில் இந்த மோதிரத்தின் பயன்பாடு விரிவுபடுத்தப்படும் என்றும் ஷாண்டா (Shanda) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மோதிரத்தைப் போன்று, காலுறைகளில் பொருத்திக் கொள்ளும் சாதனம் ஒன்றை, அமெரிக்காவைச் சேர்ந்த ஹீப்ஸிலோன் (Heapsylon) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக