கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்துவரும் சிரியாவில், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது ஐக்கிய நாடுகள் சபையின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
போரில் பாதிக்கப்பட்டவர்கள், அகதிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்திருப்பதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெனீவாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிரியாவுக்கான சர்வதேச புலனாய்வுக் குழுவின் தலைவர் பின்ஹெய்ரோ இது தொடர்பாக விளக்கமளித்தார். அரசுப் படைகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என இருதரப்பும் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியாக அவர் தெரிவித்தார்.
கொலை, சித்திரவதை உள்ளிட்ட பலவகையான போர்க்குற்றங்கள் இருதரப்பிலும் நிகழ்த்தப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். சிரியாவில் கடந்த 26 மாதங்களாக நடந்த வரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 90,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாகவும், 10,00,000-க்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறியதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக