சனி, ஜூன் 15, 2013

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:வெடிக்குண்டுகளை ரெயில்வே பயணிகள் ஓய்வறையில் தயார் செய்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

புதுடெல்லி: 68 அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வெடிக்குண்டுகளை ரெயில்வே பயணிகள்ஓய்வறையில்(Dormitory) வைத்து தயார் செய்துள்ளனர்.இத்தகவலை நேற்று முன் தினம் தேசிய புலனாய்வு ஏஜன்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த துணை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.


முக்கிய குற்றவாளியான ஹிந்துத்துவா தீவிரவாதி ராஜேந்தர் சவுத்ரி இதர 3 குற்றவாளிகளுடன் சேர்ந்து வெடிக்குண்டுகளை வெடிக்க தயாரான வகையில் தயார் செய்துள்ளார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த தினம், ஹிந்துத்துவா தீவிரவாதிகளான லோகேஷ் சர்மா, கமல் சவுகான் ஆகியோர் ரெயில்வே பயணிகள் ஓய்வறையில் இரண்டு படுக்கைகளை முன் பதிவுச் செய்துள்ளனர்.சிறிது நேரம் கழித்து சவுத்ரியும், இன்னொரு குற்றவாளியான தேடப்பட்டு வரும் ஹிந்துத்துவா தீவிரவாதியான ரமேஷ் வெங்கட் மஹல்கரும் வேறு இரு படுக்கைகளை முன்பதிவுச் செய்துள்ளனர்.

மஹல்கர் இரண்டு சூட்கேஸ் வெடிக்குண்டுகளில் டைமரை இணைத்துள்ளான். சவுத்ரி வாட்சை இணைத்துள்ளான்.ஆனால், பயணிகள் ஓய்வறையில் வேறு ஆட்கள் வந்ததால் சர்மாவுக்கும், சவுத்ரிக்கும் டைமரை இணைக்க முடியவில்லை. பின்னர் இவர்கள் பயணிகள் ஓய்வறையில் உள்ள படிக்கட்டுகளில் வைத்து சூட்கேஸ்களை பரஸ்பரம்கைமாறியதுடன், டைமர்களை இணைத்துள்ளனர். இதற்கு பிறகு பழைய டெல்லி ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட தயாராக நின்ற சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயிலின்பொது கம்பார்ட்மெண்டுகளான 12,13,15 நம்பர் பெட்டிகளில் வெடிக்குண்டுகள் அடங்கிய சூட்கேஸை வைத்துள்ளனர்.இதில் 12,13 பெட்டிகளில் வைத்த குண்டுகள்வெடித்துள்ளன. 15-வது எண் பெட்டி மற்றும் ரெயில்வே லைனில் இருந்தும் கைப்பற்றிய குண்டுகளை போலீஸ் செயலிழக்கவைத்தது. பின்னர் நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளும் ரெயிலில் ஜெய்ப்பூருக்கும், அங்கிருந்து இந்தூருக்கும் சென்றுள்ளனர்.

இந்தூரில் மஹல்கர் தங்கியிருந்த இடத்தில் வைத்து, இவ்வழக்கில் தேடப்பட்டு வரும் ஹிந்துத்துவா தீவிரவாதியான ராம்ஜி கல்சங்கரா, சவுத்ரியிடம் வெடிக்குண்ட ஒப்படைத்துள்ளான்.இந்தூர் இண்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிக்குண்டுடன் பழைய ரெயில்வே நிலையத்திற்கு வந்துள்ளான். ராஜேந்திர சவுத்ரி, சர்மா, கமல் சவுகான் ஆகியோர் தற்போது அம்பாலா சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர்.மஹல்கர் மற்றும் ராம்ஜி கல்சங்கரா ஆகியோர் இதுவரை சிக்கவில்லை.

Source : thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக