எதிர்பார்த்ததை போலவே பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மூத்த தலைவர் அத்வானி ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் அளித்த ராஜினாமா கடித்தில் கூறியிருப்பதாவது:-
தற்போது கட்சியில் உள்ள தலைவர்கள் எல்லோரும் தங்களது தனிப்பட்ட ஆதாயத்துக்காக மட்டும்தான் செயல்படுகிறார்கள். இவ்வகையில் தனிநபர் ஆதாயத்துக்காக செயல்படுபவர்களுடன் இணைந்து பணியாற்றுவது கடினமாக உள்ளது.
பா.ஜ.க.வை ஆரம்பித்த தலைவர்கள் எதிர்பார்த்த பாதையில் கட்சி இப்போது செல்லவில்லை. ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீனதயாள் உபாத்யாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்களால் எந்த நோக்கத்துடன் பா.ஜ.க. தொடங்கப்பட்டதோ அந்த சித்தாந்தத்தின்படிதான் தற்போது கட்சி செல்கிறது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எனவே, பா.ஜ.க.வில் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கடிதத்தில் கூறி இருந்தாலும் உண்மை என்னவென்று மக்கள் புரிந்துகொண்டார்கள். கடந்த மூன்று நாட்களாகவே அத்வானி மற்றும் மோடியை பற்றித்தான் அணைத்து ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டு இருந்தனர். மோடிக்கு கொடுத்த முக்கியத்துவமே இந்த முடிவுக்கு காரணம்.
"கடுப்பில் இருக்கும்பொழுது பொறுப்பு எதற்கு" என்று மண்டையை சொரிந்த அத்வானி அதே கடுப்பில் கையெழுத்தையும் போட்டுவிட்டார்.
இந்த நிலையில் அத்வானி, எடியூரப்பாவின் கட்சியில் சேருவாரா இல்லை தனிக்கட்சி தொடங்குவார என்று மக்கள் மத்தியில் ஒரு "டாக்" இருகின்றது. எது எப்படியோ இனி என்ன நடக்கும் என்று சைலண்டாக இருந்து பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக