கோலாலம்பூரில் நேற்று
நடைபெற்ற
ஆசிய எண்ணெய்,
எரிவாயு மாநாட்டில் முக்கிய
உரையாற்றிய மலேசியப்
பிரதமர் நஜிப்
துன் ரசாக்,
முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு
பொருளியல் தாராளமயக் கொள்கைகள் தேவை
என்று கூறினார்.
நீண்டகாலப்
பொருளியல் சவால்களை சமாளிக்கும்
அதே வேளையில், அனைத்துலக
அரங்கில்
போட்டி போடக்கூடிய
உள்நாட்டு
நிறுவனங்களும் தேவை
என்று அவர்
வலியுறுத்தினார்.
விலைவாசி உயர்வும் வேலையின்மையும்
குறைந்த அளவிலேயே
இருப்பதை சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 2020ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த நாடாக மலேசியாவை உருவாக்க இலக்கு வைத்துள்ளதாகவும் ஆனால் அதற்குள்ளாகவே அந்த நிலையை மலேசியா எட்டிவிடும் என்று தாம் நம்புவதாகவும் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியுள்ளார். சென்ற ஆண்டு 5.6% வளர்ச்சியடைந்த மலேசியா மிக அதிகமான வருவாயையும் ஈட்டியதாக அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக