மாநிலங்களவை தேர்தலில் திமுகவின் கனிமொழிக்கு ஆதரவு தரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாருக்கும் ஆதரவு இல்லை என்று பா.ம.க. அறிவித்துவிட்டதால் கனிமொழியின் வெற்றி தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது.
மாநிலங்களவை தேர்தலில் தங்கள் நிலைபாடு என்ன என்பது குறித்து விவாதிக்க சென்னையில் இன்று பா.ம.க. செயற்குழு கூட்டம் நடைபெற்றது. பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநிலங்களவை தேர்தலை புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு கேட்டு அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் அன்புமணியை சந்தித்து ஆதரவு கேட்டனர். தற்போது, பா.ம.க. அறிவிப்பால் தி.மு.க அதிர்ச்சி அடைந்துள்ளதோடு, கனிமொழியின் வெற்றி கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் திமுக தலைவர் கருணாநிதி கலக்கம் அடைந்துள்ளார்.
தி.மு.க.வுக்கு தற்போது 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த நிலையில், 2 இரண்டு எம்.எல்.ஏ.க்களை கொண்ட மனித நேய மக்கள் கட்சி, இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உள்ள புதிய தமிழகம் கட்சி ஆகியவை தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த இரு கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், கனிமொழி வெற்றி பெற இன்னும் 7 வாக்குகள் தேவை. ஆனால் அவர்களிடம் தற்போது இருப்பதோ 27 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். இதனால் கனிமொழி வெற்றி கேள்விக்குறியாகி இருக்கிறது.
5 எம்.எல்.ஏ.க்களை கொண்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தாலும், தி.மு.க. வெற்றி பெற மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை. 22 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள தே.மு.தி.க ஆதரவு தெரிவித்தால் மட்டுமே கனிமொழி வெற்றி பெற முடியும்.
ஆனால், தே.மு.தி.க.வும் தேர்தலில் போட்டியிட்டுள்ளதால், ஆளும் கட்சியின் அல்லது வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளை தி.மு.க. விலை கொடுத்து வாங்கினாலும் ஆச்சரியம் இல்லை. எது எப்படியோ வரும் 27ஆம் தேதி தெரிந்து விடும் கனிமொழியின் வெற்றி, தோல்வி. பொறுத்திருந்து பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக