அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என துருக்கிப் பிரதமர் தய்யிப் எர்துகான் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை புறந்தள்ளி வன்முறைகளுக்கு வழிவகுக்கும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார். வெளிநாட்டுக்கான விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பிய துருக்கியின் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாடு திரும்பிய பிரதமரை வரவேற்கும் நோக்கில் ஸ்தான்புள் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருந்தனர்.
இதேவேளை பிரதமருக்கு எதிராகவும் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டம் ஒன்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடாளவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புத் தரப்புக்கும் இடையில் தொடரும் மோதல்களில் நால்வர் பலியானதுடன் ஆயிரக்கணக்கானவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களால் துருக்கியின் பொருளாதாரமும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக