பாகிஸ்தானுக்கு அதி நவீன ராணுவத் தளவாடங்களை இஸ்ரேல் வழங்கி வருவதாக பிரிட்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள், நவீன ஆயுதங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தொடர்ச்சியாக இந்த ஆயுத விநியோகம் நடந்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தவிர எகிப்து, அல்ஜீரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொராக்கோ உள்ளிட்ட அரபு நாடுகளுக்கும் இஸ்ரேல் ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக