சனி, ஜூன் 08, 2013

சீனாவில் பரிதாபம்!- பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 38 பயணிகள் உடல் கருகி பலி! (வீடியோ இணைப்பு)

சீனாவின் பியூஜியான் மாகாணத்தின் ஜியாமென் நகரில் நேற்று  மாலை ஏராளமான பயணிகளுடன் சென்ற அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஜின்ஷான் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் சென்ற போது இத் தீ விபத்து ஏற்பட்டது.


தீ பிடித்ததை அறிந்த பயணிகள் பஸ்சின் அவசர வழி வழியாகவும் ஜன்னல்களை உடைத்துக் கொண்டும் வெளியே குதிக்க முயன்றனர்.

ஆனால், சில நிமிடங்களில் பஸ் முழுவதும் தீ பரவி வெடித்து சிதறியதால் பலர் தீயில் சிக்கினர்.  



இந்த கோர விபத்தில் சுமார் 38 பேர் உடல் கருகி இறந்தனர். 33 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



சீனாவின் மோசமான சாலைகளால் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடக்கின்றன. கடந்த 2011ம் ஆண்டு மத்திய சீனாவில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ஏற்றிச் சென்ற பஸ் தீப்பிடித்ததில் 41 பேர் இறந்தனர்.
இதுவே நாட்டின் மிக மோசமான விபத்தாக கருதப்படுகிறது. அதன்பின்னர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஷான்ஜி மாகாணத்தில் டபுள் டெக்கர் பஸ், டேங்கர் லாரியுடன் மோதியதில் 36 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக