புதுடெல்லி:நரேந்திரமோடியின் குஜராத் கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் மிகவும் பின் தங்கியுள்ளதாக திட்டக்கமிஷனின் செயல் அறிக்கை கூறுகிறது.குஜராத் மாடல் வளர்ச்சி இந்தியாவுக்கு தேவை என்று மோடியின் ஆதரவாளர்கள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகளின் வளர்ச்சி ஆகியவற்றை மாநில அளவில் திட்டக்கமிஷன் ஆய்வு செய்துள்ளது.இதில் கல்வி மற்றும் சுகாதாரத்தில் குஜராத் மிகவும் பின் தங்கியுள்ளது.அடிப்படை வசதிகளின் வளர்ச்சியில் மட்டுமே குஜராத் முன்னேற்றம் அடைந்துள்ளது.மோடியின் வளர்ச்சி வாதம் என்பது தொழிலதிபர்களுக்கு மட்டுமே என்றும் மோடி ஏழைகளை புறக்கணிக்கிறார் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுவது நிரூபணமாகியுள்ளது.
குஜராத்தை தவிர ஹரியானா, ஆந்திரபிரதேசம், உத்தரபிரதேசம், மஹராஷ்ட்ரா, அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களும் கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் இரண்டில் பின் தங்கியுள்ளன.ஆனால், 3 துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ள மாநிலங்கள்:கேரளா, தமிழ்நாடு, பீகார், ஒடிஸா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகியனவாகும்.அதேவேளையில் உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஜம்மு-கஷ்மீர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் எல்லாத் துறைகளிலும் பின் தங்கியுள்ளதாக திட்டக் கமிஷன் கூறுகிறது.
Source : thoothuonline.com
Source : thoothuonline.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக