புதன், ஜூன் 19, 2013

பீகாரில் பா.ஜனதா வன்முறை வெறியாட்டம்!

பா.ஜனதா  கூட்டணியிலிருந்து ஐ.ஜனதா தளம் வெளியேறியதையடுத்து முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலகக் கோரி பாஜக சார்பில் முழு அடைப்பு நடந்து வருகிறது. பாட்னாவில் பா.ஜனதா, ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.


பாஜகவில் நரேந்திர மோடிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 17 ஆண்டு கால உறவை முறித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் விலகியது.

இந்த நிலையில், முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலக்க கோரி பா.ஜனதா கட்சி சார்பில் இன்று பீகாரில் முழு அடைப்பு நடந்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், கார், வேன்கள் இயக்கப்படவில்லை. போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, முதல்வர் நிதீஷ்குமார் பதவி விலக்க கோரி பா.ஜனதா கட்சி சார்பில் பாட்னாவில் பேரணி நடந்தது. இந்த பேரணியின் போது ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே மோதல் ஏற்ப்பட்டது. ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்குதல் நடத்தினர். இதில், பலரது மண்டை உடைந்தது. பா.ஜனதா – ஐக்கிய ஜனதா தள தொண்டர்களின் மோதலால் பாட்னாவில் பதற்றம் நிலவி வருகிறது.

இதில் தலைவர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source : thoothuonline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக