வெள்ளி, ஜூன் 07, 2013

மாலேகான் குண்டுவெடிப்பு:முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது! – மத்திய உள்துறை இணை அமைச்சர்!

புதுடெல்லி: 2006-ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம் இளைஞர்களை மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையும், சி.பி.ஐயும் குற்றவாளிகளாக சேர்த்து கைதுச் செய்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறியுள்ளார். இத்தகைய தவறுகள் இனி  நடக்காது என்றும், இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(என்.ஐ.ஏ) ஒப்படைத்தது சரியான நடவடிக்கை என்றும் சிங் மேலும் தெரிவித்துள்ளார். 

இவ்வழக்கில் கடந்த மாதம் 22-ஆம் தேதி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். டான்சிங், ராஜேந்திர சவுத்ரி, மனோகர் நர்வாரியா, லோகேஷ் சர்மா ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கினை விவரிக்கும் இக்குற்றப்பத்திரிகையில், பலகுண்டுவெடிப்புகளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகளான டாங்கே, ராம்ஜி கல்சங்கரா உள்ளிட்டோரின் பெயர்களும் விமர்சிக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தயாரிக்கப்பட்ட வெடிக்குண்டுகளை மோட்டார் சைக்கிளில் பொருத்தி மாலேகான் மஸ்ஜிதுக்கு அருகில் வைத்ததாக வழக்கு. இக்குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டனர். 125 பேருக்கு காயம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே 13 அப்பாவிமுஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்த மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் இவ்வழக்கு விசாரணை முடிந்ததாக அவசர கதியில் வழக்கை மூடியது. பின்னர் இவ்வழக்கு அரசால் சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐயும், ஏ.டி.எஸ் கூறிய கதையையே திரும்ப கூறியது. 
இந்நிலையில் இந்தியாவின் பல பகுதிகளில் நிகழ்ந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பங்கு வெட்ட வெளிச்சமானதால் இவ்வழக்கின் விசாரணை தேசியபுலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையில் மிகப்பெரிய தவறிழைத்த ஏ.டி.எஸ், சி.பி.ஐ ஆகிய புலனாய்வு அமைப்புகளைக் குறித்து என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் கடுமையாக விமர்சித்திருந்தது.

Source : thoothuonline.com

1 கருத்து:

  1. இந்தியன் என்று சொல்லிக்கொள்ள வெக்கபடும் இந்தியன்7 ஜூன், 2013 அன்று PM 3:32

    அட பாவிகளா இது இப்போதான் உங்களுக்கு தெரியிதா, 6 வருடம் என் சமுதாய சொந்தங்கள் சிறையில் கஷ்டபட்டார்கள், இளமையை இழந்தார்கள் இதை உங்களால் குடுக்க முடியுமா?

    பதிலளிநீக்கு