வியாழன், ஜூன் 13, 2013

கருத்து மோதலினால் கொரிய நாடுகளின் பேச்சு வார்த்தை முயற்சி தோல்வி!

தென் கொரியாவுடன் நல்லுறவை காக்க வட கொரியா அக்கறை காட்ட வேண்டும் என்று தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. சரிசமமான அதிகாரிகளை பேச்சு வார்த்தைக்கு நியமிப்பதில் இரு நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கொரிய நாடுகளுக்கிடையே 6 ஆண்டுகளுக்கு பிறகு இன்றும், நாளையும் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்-னிற்கு நெருங்கிய மூத்த அதிகாரி தென் கொரியாவிற்கு வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வேறொரு அதிகாரி வருவார் என அறிவிக்கப்பட்டது.

இதனால் ஏற்பட்ட கருத்து மோதலினால் பேச்சு வார்த்தை முயற்சி தோல்வியடைந்தது. இந்த பேச்சு வார்த்தை நடந்திருந்தால் மூடப்பட்ட கேசாங் தொழிற்பூங்கா மீண்டும் திறக்கப்பட்டு, இரு நாட்டு தொழிலாளர்களுக்கு பணி வாய்ப்பு திரும்ப கிடைக்கும் என்று தென் கொரியா நம்பியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக