பருவ மழை குறைவாக பெய்யும் என்று கூறப்பட்டு வரும் நிலையை கருத்தில் கொண்டும், உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் முடிவு செய்துள்ள மத்திய அரசு தற்போது அதிகரித்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக அதன் ஏற்றுமதியை ரத்து செய்யவும் பரிசீலனை செய்யும் என தெரிகிறது.
பாசுமதி அல்லாத அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் பால் ஆகியவற்றுடன் சேர்த்து வெங்காயத்தின் விலையும் வரவிருக்கின்ற மாதங்களில் கடுமையாக உயரக்கூடும் என்று மத்திய அரசு கருதுகிறது. வார இறுதியில் அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரம், விவசாயம், நிதி மற்றும் வர்த்தகம், தொழிற்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளை சந்தித்து விலை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அரசிடம் தானியங்கள், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியவை போதிய கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் விலை உயர்வு குறித்து கண்காணிக்கும் போது எங்கு நிலைமை சிக்கலாக உள்ளதோ அங்கு அரசு இவைகளை அனுப்பி விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக