குவஹாத்தி:அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஒருவார காலமாக நிகழ்ந்துவந்த போடோ பிரிவினைவாத பயங்கரவாதிகள் நடத்திய கலவரம் ஓய்ந்துள்ளது. இம்மாதம் 15-ஆம் தேதிக்குள் வீடுகளை விட்டு வெளியேறி அகதி முகாம்களில் தங்கியிருக்கும் அனைவரும் வீடு திரும்புவார்கள் என முதல்வர் தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.கலவரம்
தீவிரமாக நடந்த கொக்ராஜர், துப்ரி, சிராங், பொகாகாவ் ஆகிய மாவட்டங்களில் உள்ள 278 அகதிகள் முகாம்களில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்க பல்வேறு இடங்களில் 10 போலீஸ் பிக்கெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ புள்ளிவிபரப்படி 56 பேர் மரணித்த கலவரத்தில் 244 கிராமங்களைச் சார்ந்த 45 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 500 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கொல்லப்பட்டவர்களில் 6 பேர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள். 11 பேரை காணவில்லை. 61 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வன்முறை நிகழ்ந்த இடங்களில் ராணுவம் கொடி அணிவகுப்பை நடத்தி வருகிறது. செவ்வாய்க்கிழமை முதல் வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என போலீஸ் கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக