புதுடெல்லி:கடந்த இருபது ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்த போதிலும் கிராமிய பகுதிகளில் மக்கள் வாழ்க்கை மாற்றமில்லாமல் தொடர்வதாக அறிக்கை கூறுகிறது. 10 சதவீதத்திற்கும் அதிகமான கிராம மக்களின் அன்றாட செலவு ரூ.17 க்கும் கீழ் இருப்பதாக அரசு நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.2011-12 சர்வே முடிவுகளின் படி கிராமீய பகுதிகளில் சராசரி மாத தனிநபர் செலவு 503.49 ரூபாய் ஆகும்.
ஆனால், நகரத்தில் அன்றாட செலவு 23.40 ரூபாயும், மாதம் 702.26 ரூபாய் ஆகும்.
மக்களின் பொருளாதார நிலையைக் குறித்து புரிந்து கொள்ள தேசிய மாதிரி சர்வே நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. வறுமைக்கோட்டிற்கும் கீழே தான் மக்களின் வாழ்க்கை நிலை அமைந்துள்ளதாக சர்வே அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வறுமைக்கோட்டின் படி கிராமத்தில் குறைந்த அன்றாட செலவு 28.65 ரூபாயும், நகரத்தில் 22.42 ரூபாயும் ஆகும்.
நகரங்களில் 70 சதவீதம் பேருக்கு அன்றாட செலவு 43.16 ரூபாய்க்கு அதிகமாகவும், 20 சதவீதத்தைக் கொண்ட மேல்தட்டு மக்களுக்கு அன்றாடம் ரூ.100க்கும் அதிகமாக செலவாகிறது. 7,391 கிராமங்களில் மொத்தம் 59,070 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நகர்ப் பகுதிகளில் 5,223 பகுதிகளில் மொத்தம் 41,062 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக