புதன், ஆகஸ்ட் 29, 2012

அஸ்ஸாம் நிலையை நேரில் கண்ட பின் பாப்புலர் ஃப்ரண்டின் அறிக்கை !

 புதுடெல்லி: அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கீழ் கண்ட அறிக்கை சமர்பிக்கப்படுகிறது. ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மெளலானா உஸ்மான் பேக் ரஷாதி, எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உறுப்பினர் மெளலானா காலித் ரஷாதி மற்றும் தன்னார்வ தொண்டு இயக்கமான ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷனின் தொண்டூழியர்களோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் நிவாரண முகாம்களுக்கு ஆகஸ்ட் 11,12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நேரடியாக சென்று பார்வையிட்ட‌ பின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:


அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தால் ஆயிரக்கணக்கான வங்காள மொழி பேசக்கூடிய முஸ்லிம்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று வரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோக்ரஜார், சீரங்க், துபாரி, பொங்கைகோன் ஆகிய மாவட்டங்களில் போடோ இனத்தீவிரவாதிகளால் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் வசித்து வந்த பல முஸ்லிம் குடும்பங்கள் 200 கி.மி தொலைவில் இருக்கின்ற நிவாரண முகாம்களுக்கு துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர்.



வங்காள மொழி பேசக்கூடிய சிறுபான்மை முஸ்லிம்களை குறிவைத்து இக்கலவரம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அன்மை காலமாகவே தொடந்து நடைபெற்று வருகிறது. போடோ இனத்தீவிரவாதிகள் மற்றும் சில இனவாத குழுக்களால் இவர்கள் தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் வங்காள தேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் என்ற பொய்யான காரணத்தை மேற்கோள் காட்டி இவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நியாயப்படுத்தப்படுகின்றன.

ஈவு இறக்கமின்றி பெண்கள், குழந்தைகள் என ஏராளமான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களுடைய சொத்துக்கள், வீடுகள் அபகறிக்கப்பட்டு அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான தாக்குதல்கள் நன்கு திட்டமிட்டே நடத்தப்படுகிறது. முஸ்லிம்கள் உயிருக்கு பயந்து தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய காவல்துறையினரும் கலவரக்காரர்களோடு இணைந்து செயல்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது வழுக்கட்டாயமாக பல இடங்களில் முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் வெளியிட்ட தகவலில் படி 2,66,700 முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள்னர். நூற்றுக்கனக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் ஏராளமானோரை காணவில்லை என்று அரசாங்கத்தின் அறிக்கை கூறுகிறது.

அரிசி, தால், உப்பு போன்ற பொருட்களை அரசாங்கம் நிவாரண முகாம்களுக்கு வழங்கி வருகிறது. இன்னும் பல முகாம்களில் போதிய வசதிகள் செய்துகொடுக்கபடவில்லை. கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும், மதரஸாக்களுக்கும் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டு மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். கோக்ரஜார் நிவாரண முகாமில் மட்டும் 17,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் ஆண்கள், கற்பின் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் ஒன்றாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதனால் நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. பல முகாம்களில் 5 வயதுக்கு உட்பட குழந்தைகள் அதிக அளவில் தங்கியிருக்கின்றனர். பாலூட்டப்பட வேண்டிய குழந்தைகளும் அதிக அளவில் இருக்கின்றனர். பல முகாம்களில் கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் சரியாக இல்லை.

பல முஸ்லிம் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அஸ்ஸாம் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். டெல்லியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ரிஹாப் இந்தியா தொண்டு நிறுவனம் 150ற்கும் மேற்பட்ட தொண்டூழியர்களை கொண்டு அஸ்ஸாம் மக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு வருகிறது. ரிஹாபின் ஊழியர்கள் ஆக்ஸ்ட் முதல் நாள் அன்றே முகாம்களுக்கு நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டு  நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கைகளை கணக்கெடுத்து அதற்கேற்ப உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். கொழு வலைகள், பாலிதின் பைகள், குழந்தைகளுக்கான உணவுகள், மெழுகுவர்த்திகள், வாலி, ஜக்கு, விரகுகள், துணிமணிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் அதிக அளவில் தேவைபடுவதாக ரிஹாபின் ஊழியர்கள் தெரிவித்தனர்.

முதற்கட்டமாக ஆக்ஸ்ட் 4ஆம் தேதி அன்று,

60 முகாம்களுக்கு குழந்தைகளுக்கு தேவையான 300 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது.

900கி.கி பாலிதின் பைகள், 1000 கொசு வலைகள், 1000 மெழுகுவர்த்திகள், 1000 வாலி மற்றும் ஜக்குகள் இவை அனைத்தும் 58 முகாம்களுக்கு வழங்கப்பட்டது. 4 லாரி முழுவதும் விரகுகள், 2 லாரி முழுவதும் காய்கறிகள், 1 லாரி முழுவதும் துணிமணிகள் பல்வேறு முகாம்களுக்கு வழங்கப்பட்டன. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைமையில் சென்ற குழு இவை அனைத்தையும் மேற்பார்வையிட்டது. மேலும் அவர்கள் சட்டரீதியான உதவிகளை மேற்கொள்ளவும் அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆறுதல் கூறப்பட்டது. 380 குடும்பங்களைச் சேர்ந்த 2000ற்கும் மேற்பட்டவர்கள் துபாரி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு கர்பிணி பெண் 10கி.மி தூரம் நடந்தே வந்து நிவாரண முகாமை அடைந்துள்ளார். முகாமிற்கு வந்த அடுத்த நாளே அவருக்கு குழந்தை பிறந்தது.


தங்கள் வீடுகளுக்கு அவர்கள் திரும்பி செல்ல வேண்டுமென்பதே அனைவர்களின் விருப்பமாக இருக்கிறது. அரசாங்கம் அவர்களுடைய மற்வாழ்விற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். 

பொங்கைகோன் மாவட்டத்திலுள்ள நிவாரண முகாமில் இருக்கும் நஜுமுதீன் என்பவர் கூறும்போது இரண்டாயிரம் நபர்கள் வசிக்கக்கூடிய தங்களது முகாமில் ஒரே ஒரு மின் விளக்கு மட்டுமே உள்ளதாகவும், போதிய மின்சாரம் இல்லையென கூறினார். அதிகளவில் மெழுகுவர்த்திகள் தங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆம்புலன்ஸ் தேவை படும் சமயத்தில் சரியாக வருவதில்லை எனவும், இம்முகாமில் தங்கி இருக்கும் அனைவருக்கு இரு கழிவறைகளே உள்ளதாக கூறினார். இம்முகாமில் ஒரு குழந்தையை பார்க்கும்போது அக்குழந்தையின் நாக்கு காயமுற்று இருந்ததையும், மருத்துவ உதவியை எதிர்பார்த்தவர்களாக இருந்ததையும் காண முடிந்தது.

கவிதா நிவாரண முகாமிற்கு சென்று பார்த்தபோது அவர்களுக்கும் போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் இரு மனைவிகளின் விதவை நிலையை காண முடிந்தது. ஒரு 5 வயது குழந்தையின் தந்தை அதன் கண் முன்னரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

செய்ய வேண்டியவை:

1. சுத்தமான குடி நீர் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
2. விரகுகள் மற்றும் கேஸ் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.
3. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் உடைகள் வழங்கப்பட வேண்டும்.
4. குழந்தைகளுக்கு தேவையான சத்தான உணவுகள் வழங்கப்பட வேண்டும்.
5. கற்பிணி பெண்களுக்கு தேவையான உணவுகள் வழங்கப்பட வேண்டும்.
6. மருத்துவ முகாம்கள் நடத்தபட வேண்டும்.
7. சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்

மேற்கூறப்பட்ட அனைத்து உதவிகளை செய்வதின் மூலமாக நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்கள் தங்கள் சொந்த ஊருகளுக்கு திரும்புவதற்கு உதவியாக அமையும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பளித்து அவர்களுடைய மறுவாழ்விற்கு  உதவி செய்வது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். அம்மாநில முதலைமைச்சர் ஆகஸ்ட் 15 தேதிக்குள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். இது வரை அது நிறைவேற்றப்படவில்லை. 3 லட்சம் மக்களுக்கு உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென்பது சாதாரண் விஷயமல்ல. மேலும் இது முழுமையான தீர்வும் அல்ல. அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றும் தங்களது வாழ்க்கையை தொடர வேண்டும். அதுவே இறுதி தீர்வாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக