டெல் அவீவ்:2003 ஆம் ஆண்டு இஸ்ரேல் ராணுவத்தின் புல்டோசரின் சக்கரங்களில் சிக்கி கொலைச் செய்யப்பட்ட அமெரிக்க மனித உரிமை ஆர்வலர் ரேய்ச்சல் கோரியின் மரணம் எதேச்சையாக நிகழ்ந்த விபத்து என்று இஸ்ரேல் சியோனிச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் துயரமானது. எனினும், இஸ்ரேல் அரசுக்கு இச்சம்பவத்தில் எவ்வித
பங்கும் இல்லை என்று ஹைஃபா மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஓடட் கெர்ஸன் தனது அநீதமான தீர்ப்பில் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியது: ‘மோதலால் பாதிக்கப்பட்ட பகுதியில் தீவிரவாதிகளுக்கு ரேய்ச்சல் உதவினார். புல்டோஸரின் டிரைவர் அவரை பார்க்கவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து ராணுவம் மக்களை அப்புறப்படுத்தியது. அதனைப் பொருட்படுத்தாமல் ரேய்ச்சல் அங்கேயே நின்றார்’ என்று கெர்ஸன் தனது தீர்ப்பில் கூறினார்.
இஸ்ரேல் சியோனிச ராணுவத்தின் அட்டூழியத்திற்கு எதிராக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தையும் குற்றவாளியாக சேர்த்து ரேய்ச்சலின் குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். இச்சம்பவம் குறித்து 2003-ஆம் ஆண்டு இஸ்ரேலிய ராணுவம் நடத்திய விசாரணையில் ரேய்ச்சலின் கொலைக்கு காரணமானவர்களை குற்றமற்றவர்கள் என கூறியது. இந்த விசாரணை ஒரு நாடகம் என்று குற்றம் சாட்டி ரேய்ச்சலின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
காஸ்ஸாவில் ஃபலஸ்தீன் மக்களின் வீடுகளை இஸ்ரேல் ராணுவம் அநீதமாக இடித்து தள்ளிய வேளையில் அதனை தடுக்க முயன்ற 23 வயதான ரேய்ச்சல் கோரி மீது புல்டோஸரை ஏற்றி கொலைச் செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் வாஷிங்டனைச் சார்ந்த ரேய்ச்சல் கோரி பிரபலமான மனித உரிமை ஆர்வலர் ஆவார். ஃபலஸ்தீன் ஆதரவு இண்டர்நேசனல் ஸாலிடாரிட்டி மூவ்மெண்டின் உறுப்பினராகவும் அவர் இருந்தார்.
இவ்வழக்கின் அநீதமான தீர்ப்புக் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபலஸ்தீன் ஆதரவு மனித உரிமை ஆர்வலர்கள், ‘இஸ்ரேலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக