வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

வயலில் தன்னை கடித்த நல்ல பாம்பை திரும்ப கடித்து கொன்ற நேபாள விவசாயி !

வயலில் தன்னை கடித்த நல்ல பாம்பை திரும்ப கடித்து கொன்ற நேபாள விவசாயிநேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் தென்கிழக்கே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த விவசாயி சல்மொதின். அவர் நெல் பயிரிடப்பட்ட தனது  வயல்காட்டை சுற்றிப்பார்க்க சென்றிருக்கிறார். இருட்டும் நேரத்தில் திரும்பி வந்த வழியில் ஏதோ தன்னை கடித்துவிட்டதாக உணர்ந்திருக்கிறார். உடனடியாக வீட்டிற்கு சென்று விளக்கை எடுத்து வந்து அந்த இடத்தில் பார்த்தபோது அது ஆறடி நீளமுள்ள ஒரு நல்லபாம்பு என்பது தெரியவந்தது.
 
உடனே அந்த பாம்பை பிடித்த விவசாயி நறநறவென திரும்ப திரும்ப கடித்திருக்கிறார். அந்த நல்ல பாம்பை சாகும் வரை கடித்து தூக்கி வீசிவிட்டு வீட்டுக்கு திரும்பியிருக்கிறார்.
 
பின்னர் எதுவும் நடக்காதது போல தனது வேலைகளை செய்து இருக்கிறார். இவ்விஷயம் தனது குடும்பத்தினருக்கு தெரிய வர அவர்களின் வற்புறுத்தலுக்கு பிறகு மருத்துவமனைக்கு செல்ல ஒப்புக்கொண்டிருக்கிறார்.
 
நேபாளில் விஷமற்ற இந்த கோப்ரா வகை நல்லப்பாம்புகள் அரியவகை பட்டியலில் இல்லை. அதனால் அவர் மீது எந்த வழக்கும் காவலர்களால் பதிவு செய்யப்படவில்லை.
 
மலைப்பிரதேஷ நாடான நேபாளில் உள்ள டேரை தென் சமவெளிப் பகுதியில் சென்ற ஆண்டில் மட்டும் 20,000 பேரை பாம்பு கடித்திருக்கிறது. அதில் 1000 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக