கமுதி:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பாக போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர் காதர் பாட்சா என்ற வெள்ளைச் சாமி(வயது 70) இவர் கமுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் வழக்கமாக காலையில் நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்று அதிகாலையில் வழக்கம்போல் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்பொழுது
சரமாரியாக வெட்டுப்பட்ட வெள்ளைச்சாமி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இதற்கிடையில் வெள்ளைச்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். இதை அறிந்ததும் தனசீலன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவர்கள் தனசீலனை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் தனசீலன் இறந்துபோனார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பிணமாக கிடந்த வெள்ளைச்சாமி-தனசீலன் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக