வியாழன், ஆகஸ்ட் 16, 2012

அமெரிக்காவின் நிவாரண உதவி தேவையில்லை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஈரான் அறிவிப்பு !

பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்காவின் நிவாரண உதவியை ஏற்க முடியாது,'' என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது.ஈரானில், தப்ரிஸ் நகரில், கடந்த 11ம் தேதி, இரண்டு முறை பூகம்பம் ஏற்பட்டது. இதில், 306 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தால் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அரசு, நிவாரண உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது.இதுகுறித்து, ஈரான் உள்துறை அமைச்சர் ஹசன்
கடாமி குறிப்பிடுகையில், "பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா நல்ல எண்ணத்துடன் உதவுவதாக தெரியவில்லை. தற்போது, எங்களுக்கு மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. அமெரிக்கா உண்மையில் உதவுவதாக நினைத்தால், மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக