பிரச்னைக்குரிய தீவு பகுதியில் நீந்திச் சென்றதற்காக, தென் கொரிய நடிகர் நடித்த நாடகத்தை, ஜப்பானிய "டிவி' நிறுவனம் ஒளிபரப்ப மறுத்துள்ளது.
ஜப்பானுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே உள்ளது, டோக்டோ மற்றும் டேக்ஷிமா தீவுகள். இந்த தீவுகளுக்கு இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.இதற்கிடையே தென் கொரிய சுதந்திர தினத்தையொட்டி, இந்த தீவுக்கு தென் கொரிய நடிகர் சாங் குக் மற்றும் கிம் ஜாங் ஹூன் உள்ளிட்ட, 40 பேர் நீந்திச் சென்றனர்.
இதனால், ஜப்பான் அரசு கடுப்பானது. சாங் குக் நடித்து கிம் ஜாங் பாடிய பாடலுடன் கூடிய நாடகம், ஜப்பானிய "டிவி'யில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. தீவுகளுக்கிடையே நீந்திய பிரச்னை காரணமாக, இந்த நாடகத்தை ஒளிபரப்புவதை, ஜப்பான் பி.எஸ். நிப்பான் கார்ப்பரேஷன் நிறுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக