வியாழன், ஆகஸ்ட் 16, 2012

டெசோ அமைப்பின் அடுத்த மாநாட்டை அர்ஜெண்டினாவில் நடத்த திமுக திட்டம் !

 Next Teso Meet Argentina சென்னை: தமிழீழ ஆதரவாளர்கள் அமைப்பான "டெசோ"வின் அடுத்த மாநாட்டை தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் நடத்தலாமா என்பது குறித்து திமுக ஆராய்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.சென்னையில் கடந்த 12-ந் தேதி நடத்தப்பட்ட டெசோ மாநாட்டையொட்டி ஆய்வரங்கத்தில் வெளிநாட்டில் டெசோ மாநாட்டை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. வெளிநாடு ஒன்றில் டெசோ மாநாட்டை நடத்துவதன் மூலம் சர்வதேசத்தின் கவனத்தை
ஈர்க்க முடியும் என்றும் திமுக கருதுவதாகக் கூறப்படுகிறது. மேலும் ஆய்வரங்கில் கலந்து கொண்ட அனைத்து வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடமும் வெளிநாடு ஒன்றில் டெசோ மாநாட்டை நடத்துவது குறித்து கருத்தும் பெறப்பட்டிருக்கிறது
பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அர்ஜெண்டினா போன்ற ஒரு நாட்டில் நடத்தலாம் எனக் கூறியிருக்கின்றனர். டெசோ மாநாட்டு பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் சுபவீரபாண்டியனும் கூட இதனைக் கோடிட்டுக் காட்டுப் பேசினார். பன்னாட்டுப் பிரதிநிதிகள் அர்ஜெண்டினாவில் நடத்த ஆர்வம் காட்டுவதாகவும் சுப.வீரபாண்டியன் கூறியிருந்தார்.இந்நிலையில் அர்ஜெண்டினாவில் டெசோ மாநாட்டை நடத்துவது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக