குவஹாத்தி:லோயர் அஸ்ஸாமில் மீண்டும் நடந்த தாக்குதலில் இரண்டு தொழிலாளர்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். ஒருவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. துப்ரி மாவட்டத்தில் உள்ள பங்களதோபாவில் இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிட்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கற் சூளையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் கூறுகிறது. அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தப்பட்ட வேளையில் இத்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
சப்பால் காவல் சரகத்திலுள்ள பொங்கல்டோபா என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்று மாலை மீன் பிடித்துவிட்டு சப்பால் பகுதியிலுள்ள தங்கள் நிவாரண முகாமுக்குத் திரும்பிக்கொண்டிருந்த 7 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை போலீசார் தேடி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த தாக்குதல்களில் துப்ரி, கோக்ராஜர், சிராங் ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. துப்ரி மாவட்டத்தில் நடந்த தாக்குதல்களுக்குப் பின் இந்த 7 பேரும் சப்பால் பகுதியிலுள்ள நிவாரண முகாமில் தங்கியிருந்தனர். அவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது.
துப்ரி துணை கமிஷனர் குமுது சந்திராகலிதா மற்றும் மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
துப்ரி, கொக்ராஜர் மற்றும் சிராங் மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக