வியாழன், ஆகஸ்ட் 30, 2012

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதல்: 8 பேர் பலி !

Two IAF helicopters collide mid-air, 8 deadஜாம்நகர்:இந்திய விமானப்படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு அருகே நாடுவானில் திடீரென மோதிக் கொண்டதில் சிதறி உடைந்தன. இதில் பயணித்த 8 பேர் மரணமடைந்துள்ளார்கள். இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் குஜராத் மாநிலம்
ஜாம்நகர் தளத்தில் இருந்து இன்று பயிற்சிக்காகப் புறப்பட்டன.
பகல் 12.25 மணியளவில் ஜாம்நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள சர்மத் கிராமத்தின் மீது பறந்து கொண்டிருந்த போது திடீரென இரு ஹெலிகாப்டர்களும் மோதிக் கொண்டன.
பின்னால் சென்ற ஹெலிகாப்டரின் இறக்கையும் முன்னாள் சென்ற ஹெலிகாப்டரின் பின் பகுதியும் மோதிக் கொண்டன. இதில் முன்னாள் சென்ற ஹெலிகாப்டரின் வால் பகுதி உடைந்து விழுந்தது. தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரும் பலமுறை குட்டிக் கர்ணம் அடித்தபடி தரையில் விழுந்து நொறுங்கியது.
அதே போல பின்னால் சென்ற ஹெலிகாப்டரின் இறக்கை உடைந்து சிதறியதோடு, அந்த ஹெலிகாப்டரும் படுவேகத்தில் தரையில் விழுந்து சிதறியது.
இதில் ஹெலிகாப்டர்களில் இருந்த 8 வீரர்களும் பலியாகிவிட்டனர். மேலும் தரையில் இருந்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக