புதுடெல்லி:வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டால் பா.ஜ.கவுடனான உறவு முறியும் என்றும், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தயங்கமாட்டோம் எனவும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனை அவர் ‘தி வீக்’ பத்திரிகைக்கு அளித்துள்ள
பேட்டியில் கூறியுள்ளார்.
ஆனால், இப்பேட்டியை தாம் அளிக்கவில்லை என்று நிதீஷ் குமார் மறுத்துள்ளார். அவரது மறுப்பினைத் தொடர்ந்து ‘தி வீக்’ பத்திரிகையின் இணையதள பதிப்பில் இருந்து நிதீஷ்குமாரின் கருத்து நீக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் நிதீஷ் குமாரிடம் பேட்டி எடுக்கப்பட்டதாகவும்; பேட்டியின்போது, “பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட சில நிமிஷங்களிலேயே பா.ஜ.க.வுடனான உறவை முறித்துக்கொள்வோம்” என்று நிதீஷ் குமார் கூறியதாகவும் ‘தி வீக்’ கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக