இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் கம்ரா விமானநிலையத்தின் மீது வியாழக்கிழமை அதிகாலையில் போராளிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 2 பாதுகாப்பு படையினரும், 8 போராளிகளும்
கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவ சீருடை அணிந்த போராளிகள் அதிகாலை 2.30 மணிக்கு விமானநிலையத்தில் நுழைந்தனர். இக்குழுவில் 8 பேர் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. ஏழுபேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஐந்து மணிநேரம் நீண்ட மோதலின் இறுதியில் போராளிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் கமாண்டோக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள முக்கிய விமானதளங்களில் ஒன்றுதான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கம்ரா விமான தளம். இந்த விமான தளம் இஸ்லாமாபாத்தில் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ளது.
பாகிஸ்தான் விமான தளங்கள் மீது போராளிகள் இதற்கு முன்னரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 2011 மே மாதம் கராச்சி விமானநிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக