புதன், ஆகஸ்ட் 22, 2012

இஸ்ரேலின் எந்த தாக்குதலையும் சந்திக்க ஈரான் தயார்! – ஈரான் பாதுகாப்பு அமைச்சர் !

Iranian Defense Minister Ahmad Wahidiடெஹ்ரான்:ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேலின் எவ்வித தாக்குதலையும் சந்திக்க ஈரான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அஹ்மத் வஹீதி கடந்ததிங்கள் கிழமை தெரிவித்துள்ளார்.ஈரான் மீதான பகை உணர்வை வெளிப்படுத்தும்அறிக்கைகள் மூலம் சியோனிஸ தலைமை ஒரு தாக்குதலுக்கு தயாராகி வருவதாக  ‘மஹர்’ செய்தி ஏஜன்சிக்கு அளித்த பேட்டியில் அவர்
தெரிவித்துள்ளார்.
‘ஈரான் விவகாரத்தில் சியோனிஸ தலைவர்களிடையே கருத்துவேறுபாடு உள்ளது. இத்தகைய அறிக்கைகளுக்கு எவ்வித மதிப்பும் இல்லை’ என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யஹூத் பாரக்கின் அறிக்கை பதிலாக வஹீதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘இஸ்லாத்தின் எழுச்சிதான் இஸ்ரேலின் இத்தகைய மிரட்டல்களின் பின்னணியில் இருப்பதாகவும்’ வஹீதி மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக