மும்பை:ஆஸாத் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த வன்முறை தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நிலைமைகள் சீரானதாகவும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அஸ்ஸாம் கலவரம் மற்றும் மியான்மர் முஸ்லிம் படுகொலையை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள்
கொந்தளித்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். 55 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் படி கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இவர்களை நீதிமன்றம் இம்மாதம் 19-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டோர் மகளிர் போலீசாரின் இரண்டு ரைஃபிள்களையும், பிஸ்டல்களையும் பறித்ததாக கூறப்படுகிறது. மக்கள் கூட்டம் கல்வீச்ச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். மும்பை நகரத்தில் இயங்கி வரும் ரஸா அகாடமியின் அழைப்பின் பெயரிலேயே போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் முன்னாள் போலீஸ் அதிகாரி ஷமீர் கான் பத்தானின் அவாமி விகாஸ் பார்டியும் கலந்துகொண்டது. நிகழ்ச்சியில் உரையாற்றியவர்கள் உணர்ச்சியை தூண்டும் வகையில் பேசினார்களா? என்பது குறித்து க்ரைம் ப்ராஞ்ச் விசாரித்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக