டமாஸ்கஸ்:கொடுங்கோலன் பஸ்ஸாருல் ஆஸாத்தின் ஆட்சியில் பெருநாள் தினத்திலும் 160க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.டமாஸ்கஸ், தர்ஆ ஆகிய நகரங்களைச் சார்ந்தோர் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். பெருநாள் தொழுகை முடிந்ததும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசை எதிர்த்து
பிரம்மாண்ட பேரணிகள் நடத்தப்பட்டன.
‘அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பதவி விலகவேண்டும்! உலகத்தின் அமைதி சிரியா மக்கள் மீதான தாக்குதல்’ என்று பேரணியில் கலந்துகொண்டோர் முழக்கமிட்டனர். சிரியாவின் சில பகுதிகளில் நடந்த பேரணிகளின் காட்சிகள் யூ ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது.
“எங்கள் இறைவா! எங்களுடைய புரட்சியை வெற்றிப் பெறச் செய்வாயாக! இந்த அக்கிரமக்காரனை வெளியேற்றுவாயாக!” என்று எழுதப்பட்ட அட்டைகளுடன் மக்கள் பேரணியில் கலந்துகொண்ட வீடியோக்கள் யூ ட்யூபில் காணக்கிடைக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக