செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

எகிப்து:பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்- முர்ஸி அதிரடி நடவடிக்கை !

Egypt's president retires defense minister.கெய்ரோ:எகிப்து ராணுவ தலைமை தளபதியும், பாதுகாப்பு அமைச்சருமான மார்ஷல் ஹுஸைன் தன்தாவியை பதவியை விட்டு நீக்கி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் அதிபர் முஹம்மது முர்ஸி. ஞாயிற்றுக்கிழமை மாலை முர்ஸியின் செய்தி தொடர்பாளர் யாஸிர் அலி தன்தாவி நீக்கப்பட்ட தகவலை தேசிய தொலைக்காட்சி சேனல் வாயிலாக அறிவித்தார். தன்தாவிக்கு பதிலாக அப்துல் ஃபத்தாஹ்
அல் ஸீஸி நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் ராணுவ கவுன்சிலான ஸ்காஃபில் 2-வது இடத்தை வகிக்கும் ஸாமி அனானை அதிபரின் முக்கிய ஆலோசகராக நியமித்த முர்ஸி, எகிப்தின் மூத்த சட்ட வல்லுநரான மஹ்மூத் மக்கியை துணை அதிபராகவும் நியமித்துள்ளார். மேலும் அதிபரின் அதிகாரத்தை வெட்டிக் குறைக்கும் அரசியல் சாசன பிரிவுகளை ரத்துச் செய்துள்ளார்.
ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சி காலத்தில் அவருடைய நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்த தன்தாவி இருபது ஆண்டுகளாக எகிப்தின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வந்தார். முர்ஸி அதிபராக பதவியேற்ற போதும் தன்தாவியை பாதுகாப்பு அமைச்சர் பதவியில் நியமித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக