வெள்ளி, மே 03, 2013

சி.ஐ.ஏவிடம் பணம் வாங்கிய சம்பவம்:கர்ஸாயின் அமெரிக்க எதிர்ப்பு வேடம் கலைந்தது!

காபூல்:அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்க்கிறேன், ஆப்கானின் இறையாண்மையை யாருக்கும் அடிபணிய வைக்கமாட்டோம் என்று வீராப்பாக பேசி வந்த ஆப்கான் அதிபரும் அமெரிக்காவின் கைப்பாவையுமான ஹமீத் கர்ஸாயின் போலி வேடம் கலைந்துள்ளது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏவிடம் இருந்து பெட்டிகள் நிறைய பணத்தை வாங்கிய செய்தியை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. இதனை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார் கர்ஸாய்.

சி.ஐ.ஏவிடம் பணம் பெற்ற சம்பவம் கர்ஸாயின் இமேஜுக்கு கிடைத்த பெரும் பின்னடைவாக அவரது விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அமெரிக்க அரசியல் தலைமையிடமிருந்து வெளிப்படையாக பணம் வாங்குவதற்கு பதிலாக உளவு அமைப்பிடமிருந்து பரம ரகசியமாக பணம் வாங்கியதை நியாயப்படுத்த முடியாது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். சி.ஐ.ஏ விடமிருந்து வாங்கிய பணத்தை நோயாளிகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செலவிட்டதாக கர்ஸாயின் அலுவலகம் விளக்கம் அளிக்கிறது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக