பிரிட்டனில் கடந்த 1905ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காட்பரிஸ்(Cadbury) விற்பனை பொருட்கள் அனைத்தும் பாலிலேயே செய்யப்படுவதால் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் உலக பிரசித்தி பெற்றவை ஆகும்.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் திகதி திரிபுரா மாநிலத்தில் அகர்தலாவைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மூன்று வயதுக் குழந்தைக்கு காட்பரிஸ் சொக்லேட் வாங்கிக் கொடுத்துள்ளார்.
அதனை அந்த குழந்தை சாப்பிட்டு கொண்டிருந்தபொழுது, அதில் ஒரு இரும்பு ஆணி இருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனேயே நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் பதிவு செய்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த திரிபுரா நுகர்வோர் நீதிமன்றம், காட்பரிஸ் நிறுவனம் ஆணி இருந்ததாக கூறும் நபருக்கு ரூ.30,000 நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
அது மட்டுமின்றி இந்த வழக்கிற்கு ஆகும் செலவுத் தொகையான ரூபாய் ஆயிரத்தையும் காட்பரிஸ் நிறுவனமே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு சென்ற வாரமே அளிக்கப்பட்டு விட்டது. எனினும் நுகர்வோர் நீதிமன்ற அதிகாரி ஒருவர் இந்த செய்தியை இன்று தான் உறுதி செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக