திங்கள், மே 20, 2013

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார் முதல் சவூதி அரேபியா பெண்!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார் சவூதி அரேபியா பெண்ணான ரஹா முஹாரக். இச்சாதனை குறித்து அவரது தந்தை ஹசன் முஹாரக் கூறுகையில், நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். சனிக்கிழமை மாலை முஹாரக் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.
அவரைத் தொடர்பு கொண்டு, எங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தோம். ரஹாவும் மிக்க மகிழ்வுடன் உள்ளார் என்றார். இதன் மூலம், உலகின் 7 பெரிய சிகரங்களை ஏற வேண்டும் என்ற ரஹாவின் லட்சியம் நிறைவேறியுள்ளது.
இதற்கு முன் ஐரோப்பா, தான்சானியா, தென் துருவம் மற்றும் ஆர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் உள்ள சிகரங்களை ரஹா ஏறியுள்ளார் என்றும் அவரது தந்தை தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக