திங்கள், மே 13, 2013

மூன்றாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகிறார் நவாஸ் ஷெரிஃப்!

பாகிஸ்தான் தேர்தலில், நவாஸ் ஷெரிஃப்பின் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்ற 272 தொகுதிகளில் 235 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நவாஸ் ஷெரிஃப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க மொத்தம் 137 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இருப்பினும், நவாஸ் ஷெரிஃப் கட்சி, சிறிய கட்சிகளி்ன் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதன் மூலம் நவாஸ் ஷெரிஃப் மூன்றாவது முறையாக பிரதமராவது உறுதியாகிவிட்டது. தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சஃப் கட்சி 32 தொகுதிகளிலும், ஆசிப் அலி சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தலில் முல்தான் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானியின் மகன் அலி ஹைதர் தோல்வி அடைந்தார். முன்னதாக பிரச்சாரத்தின்போது அலி ஹைதரை, அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுவிட்டனர்.
நவாஸ் ஷெரிப்புக்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து:
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய நவாஸ் ஷெரிப்புக்கு, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், நவாஸ் ஷெரிப் தலைமையிலான அரசுடன் இணைந்து, இரு தரப்பு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உறவு மேம்படும்: சல்மான் குர்ஷித் நம்பிக்கை:
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரிஃப் பதவியேற்றால், இரு தரப்பு உறவு மேம்படும் என வெளியுறவுத்தறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் செரிப் பொறுப்பேற்றால், அந்நாட்டுடனான உறவு மேலும் வலுப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
”ஊடகங்களில் அவர் (நவாஸ்) பேசியதைப் பார்க்கும் போது, அவரது செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமான முறையில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தியா அதற்கு ஏற்றவாறு செயல்படும்.” என வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக