வெள்ளி, மே 31, 2013

கழிவறையில் மீட்கப்பட்ட குழந்தையின் தாய் மீது நடவடிக்கை இல்லை!-சீன அதிகாரிகள்!

சீனாவில் கழிவறைக் குழாயில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாயாருக்கு எதிராக எந்தவிதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படாது என்று சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனை ஒரு விபத்தாகவே தாம் கணிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கழிவறைக் குழாயில் அகப்பட்டதில் சிறிய வெட்டுக் காயங்களை அடைந்திருந்த அந்தக் குழந்தை மருத்துவமனையில் இருந்து அதனது தாயின் பராமரிப்புக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தையை கழிவறையில் பிரசவித்த அந்த 22 வயதான தாய், அது அந்த கழிவறைக் குழாயினுள் தவறுதலாக வீழ்ந்து உள்ளே சென்று விட்டதால் அவசரப் பணியாளரை அழைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.
தனக்கு திருமணமாகாத காரணத்தால், பிரசவத்தை மறைத்த அந்தத் தாய், கடந்த சனிக்கிழமை அந்தக் குழந்தை பிறந்த பின்னர் அதனை அந்த கழிவறையில் தவற விட்டிருக்கிறார்.
அந்தக் குழாயை உடைத்து அந்தக் குழந்தையை மீட்க தீயணைப்புப் படையினருக்கு ஒரு மணிநேரம் பிடித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக