முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களையும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்தும் அரும்பணியை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தில், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசுகையில், ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்காக வீரமங்கை வேலு நாச்சியார் திண்டுக்கல்லுக்கு வரவழைத்து பீரங்கிகளையும், படை வீரர்களையும் வழங்கிய மாவீரன் ஹைதர் அலி மற்றும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய அவரது புதல்வர் திப்பு சுல்தான் நினைவாக திண்டுக்கல்லில் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
இவர்களது கோரிக்கையை ஏற்று, ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சிக்கும், அடிமைத்தனத்திற்கும் எதிராக கிளர்ந்தெழுந்து தன்னுயிரையும் துச்சமென மதித்து போராடி வீரமரணம் அடைந்த ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் நினைவாக திண்டுக்கல் மாவட்டத்தில், அரசின் சார்பில் ஒரே வளாகத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
1
muslimkalai cover pandarathukaga jaya paapathi podum arasiyal naadagam
பதிலளிநீக்கு