புதன், மே 08, 2013

பிறக்கும் நாளில் இறக்கும் குழந்தைகள் இந்தியாவில் தான் அதிகம் : அதிர்ச்சி தகவல்!

புது டெல்லி : 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தியாவில் பிறந்த அன்றே இறந்து போகின்றன என்றும் உலகின் வேறெந்த நாட்டையும் விட இது அதிகம் என்ற அதிர்ச்சி தகவல் 'உலக தாய்மார்களின் நிலை 2013' திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவ்வறிக்கையின் படி ஒவ்வோர் வருடமும் இந்தியாவில் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 300 குழந்தைகள் பிறந்த அன்றே இறந்து விடுகின்றன. இது உலகத்தில் பிறந்த அன்றே இறக்கும் குழந்தைகளில் கால் பகுதிக்கும் மேலாக 29 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் உள்ள 176 நாடுகளில் பிறந்த அன்றே இறக்கும் குழந்தைகளை கணக்கெடுத்துள்ள ஆய்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள் தொகை உள்ள சீனாவில் பிறந்த அன்றே இறக்கும் குழந்தைகள், மொத்த இறக்கும் குழந்தைகளில் 5 சதவிகிதம் மட்டுமே. இப்பட்டியலில் சீனா 4வது இடத்தில் உள்ளதோடு முதல் பத்து நாடுகளில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளான இந்தியா, சீனா, இந்தோனேசியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, எத்தியோப்பியோ போன்ற நாடுகள் உள்ளன.

தென் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பிறந்த அன்றே குழந்தைகள் அதிகம் இறப்பதற்கு மக்கள் தொகை மட்டும் காரணம் என்று சொல்வதை மறுத்துள்ள அவ்வறிக்கை, போதுமான மருத்துவர்களும் மருத்துவ வசதிகள் இல்லாமையும் விழிப்புணர்வு இல்லாமையுமே குழந்தைகள் இறப்புவீதம் அதிகமாக உள்ளதற்கான காரணங்கள் எனத் தெரிவித்துள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக