வியாழன், மே 09, 2013

காஷ்மீர் சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி சனாஉல்லா உயிரிழப்பு!

காஷ்மீர் சிறையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கைதி, சனாஉல்லா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 1999-ஆம் ஆண்டு, தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சனாஉல்லா, கடந்த 14 ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீரின் கோட் பால்வால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

52 வயதான சனாஉல்லா, கடந்த 3-ஆம் தேதி சிறையில் உள்ள சக கைதி ஒருவரால் தாக்கப்பட்டார். இதில், பலத்த காயமடைந்து சுய நினைவு இழந்த சனா உல்லாவுக்கு, சண்டிகர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு உடல்நிலை மிகவும் மோசமானதால் சனாஉல்லாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறுநீரகம் செயலிழந்ததால், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்திய கைதி சரப்ஜித் சிங், சக கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சனாஉல்லா மீது தாக்கல் நடத்தப்பட்டது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக