சனி, மே 11, 2013

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு! : ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கு தொடர்பு?

பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என போலீஸார் தெரிவித்துள்ளனர். கர்நாடகா-கேரளா எல்லைப் பகுதியைச் சேர்ந்த அந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. 

இந்நிலையில், இந்த வழக்கில் அப்பாவியாக  கைது செய்யப்பட்டுள்ள கிச்சான் புகாரியிடம் இருந்து மொத்தம் 16 சிம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்ததாக  சொல்லபடுகிறது. எனவே, குற்றவாளிகள் தப்பவும் விசாரணையை திசை திருப்பவும் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரின் சிம் கார்டை பயன்படுத்தினரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக