புதன், மே 15, 2013

சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு : பிஜேபி தலைவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு!

புது டெல்லி: குஜராத்தில் கொல்லப்பட்ட சொக்ராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் பிஜேபி மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப் சந்த் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்துள்ளது.


கடந்த நவம்பர் 25, 2005 அன்று சொக்ராபுதீன் ஷேக் காவல்துறையுடன் நடந்த மோதலில் என்கவுண்டர் செய்யப்பட்டதாக குஜராத் காவல்துறை அறிவித்தது. அவரின் சாவில் மர்மம் இருப்பதாக சொக்ராபுதீன் ஷேக்கின் சகோதரர் புகார் அளித்ததைத் தொடர்ந்து சிபிஐ இவ்வழக்கை விசாரித்தது.

விசாரணையில் சொக்ராபுதீன் ஷேக் மற்றும் அவர் மனைவி கவுசர் பீவி ஆகியோரைக் காவல்துறை கடத்திச் சென்று சொக்ராபுதீனை கொலை செய்த விவரமும் அவர் மனைவியை அடைத்து வைத்து வன்புணர்ந்து பின்னர் எரித்து கொலை செய்த விவரமும் தெரிய வந்தது. இதற்கிடையில் இவ்வழக்கில் முக்கிய சாட்சியான சொக்ராபுதீன் ஷேக்கின் நண்பர் பிராஜாபதியை ராஜஸ்தான் காவல்துறையுடன் சேர்ந்து மற்றொரு போலி என்கவுண்டரில் குஜராத் காவல்துறை கொலை செய்தது. அப்போது ராஜஸ்தான் மானிலத்தை பாஜக ஆட்சி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு விசாரணையின் பல கட்டங்களிலும் சொக்ராபுதீனைக் கொலை செய்ததை மறுத்த குஜராத் அரசு, பின்னர் சொக்ராபுதீன் கொலை செய்யப்பட்டது போலி என்கவுண்டரில்தான் என்று ஒத்து கொண்டது. இவ்வழக்கில் மோடியின் வலதுகரமாக கருதப்படும் அப்போதைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் ராஜஸ்தான் மாநில பிஜேபி மூத்த தலைவர்களில் ஒருவரும் ராஜஸ்தான் மாநில முன்னாள் உள்துறை அமைச்சருமான குலாப் சந்த் கட்டாரியா மீது சிபிஐ இன்று வழக்கு பதிவு செய்துள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக