வியாழன், மே 09, 2013

கர்நாடகாவில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. 7 ஆண்டுகளுக்குப் பின் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமையவிருக்கிறது. கர்நாடகா சட்டப்பேரவைக்காக கடந்த 5ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று 36 மையங்களில் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கும் போதே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.

தேர்தல் நடந்த 223 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 120 தொகுதிகளைப் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது.
படுதோல்வியை சந்தித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 40 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. எடியூரப்பா மற்றும் ஸ்ரீராமலு ஆகியோர் தனித்தனி கட்சிகளை ஏற்படுத்தி போட்டியிட்டதே பாரதிய ஜனதாவின் படுதோல்விக்கு காரணமாக கூறப்பட்டாலும் ஊழல், தலித் சிற்பான்மை விரோதப்போக்கும் காரணமாக கூறப்படுகிறது.
மதச்சார்பற்ற ஜனதா தளம் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 7 தொகுதிகளிலும், பி.எஸ்.ஆர் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 12 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக