வெள்ளி, மே 31, 2013

தமிழகத்தில் குட்கா-பான் மசாலாவுக்கு தடை! : அரசாணை வெளியீடு!

இந்தியா முழுவதும் குட்கா, பான்மசாலா போன்ற மெல்லும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளைப் பற்றி கேட்டிருந்தது. அதனை கவனத்தில் கொண்ட தமிழக அரசு, புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் அவற்றுக்கு மீண்டும் தடை விதிக்க முடிவு செய்தது. 

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகளின்படி, குட்கா, பான் மசாலா மற்றும் பிற அனைத்து புகையிலைப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதற்கான அரசாணை நேற்று  வெளியிடப்பட்டது. 

உணவு பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அந்த ஆணையில், "உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ன் படி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிகோடின் மற்றும் புகையிலையை உணவுப் பொருட்களில் பயன்படுத்தக் கூடாது. எனவே, மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் அடங்கிய அனைத்து பொருட்களின் தயாரிப்பு, இருப்பு மற்றும் விற்பனை தடை செய்யப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக